Advertisement

Responsive Advertisement

ஜம்மு - காஷ்மீ்ர்: வைஷ்ணவ தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு -காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவ தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் வந்து தேவி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். இதனால், மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றுள்ளனர். இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மற்றும் ஜம்முவில் இருந்து வந்த பக்தர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

image

இந்த நிலையில் தேவி கோயில் கூட்ட நெரிச‌லில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும், நெரிச‌லில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மதுரை மத்திய சிறையில் கைதிகள் ரகளை: 3 வழக்குகள் பதிவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pH6wyG
via Read tamil news blog

Post a Comment

0 Comments