Advertisement

Responsive Advertisement

டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா, டெல்டா வகையைவிட பல மடங்கு வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் கூட்டங்கள், கலாசார நிகழ்ச்சிகள், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் டெல்லி காவல்துறையினர் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்கக் கூடாது என வணிகர்கள் சங்கத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mqaKcb
via Read tamil news blog

Post a Comment

0 Comments