பஞ்சாப் மாநிலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் தனது எண்ணம் என்றும், அதை அரசியல் மூலமாகவோ, வேறு வழிகளிலோ செய்யலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ஹர்பஜன் சிங் அரசியல் கட்சியில் இணையப்போவதாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு அனைத்து அரசியல் கட்சிகளிலும் ஆட்களை தெரியும் என்றும், கட்சியில் இணைவதாக இருந்தால் முன்கூட்டியே சொல்லி விடுவேன் என்றும் தெரிவித்தார்.
இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார். சக கிரிக்கெட் வீரர் என்ற முறையிலேயே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை, சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32xp23u
via Read tamil news blog
0 Comments