Advertisement

Responsive Advertisement

வேகமாக பரவும் ஒமைக்ரான்: ஆக்சிஜன் தயார் நிலை குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு

நாடெங்கும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆய்வு செய்தார்.

இந்தாண்டு மத்தியில் ஏற்பட்ட கொரோனா 2வது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. ஆக்சிஜன் இன்றி ஏராளமானோர் இறந்ததாக தகவல் வெளியானது. தற்போது ஒமைக்ரான் அலை பரவும் நிலையில் ஆக்சிஜன் கையிருப்பு, உற்பத்தி நிலவரம் குறித்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தொழிற்துறையினருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

image

தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவ ஆக்சிஜனை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததாக அமைச்சர் பியுஷ் கோயல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குக - மத்திய அரசு வலியுறுத்தல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32O2pIa
via Read tamil news blog

Post a Comment

0 Comments