Advertisement

Responsive Advertisement

கர்நாடகா: பதிவுத் திருமணம் செய்த மகளை தாக்கிய தந்தை

மைசூரில் பதிவு திருமணம் செய்யச் சென்ற மகளை தந்தை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த இளம்பெண், நஞ்சன்குட் பகுதியில் பதிவாளர் அலுவலகத்திற்கு காதலனுடன் சென்று பதிவு திருமணம் செய்துள்ளார். இதையறிந்து பதிவாளர் அலுவலகம் சென்ற பெண்ணின் தந்தை பசவராஜ் நாயக், அலுவலகத்திலேயே மகளை அடித்து வீட்டுக்கு இழுத்துச் செல்ல முயன்றார்.

தலைமுடியை பிடித்து இழுத்துச் செல்ல முயன்றதோடு, தாலியையும் பறிக்க அவர் முயன்றுள்ளார். அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரிடமிருந்து அந்த பெண்ணை மீட்டு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/33UuTk8
via Read tamil news blog

Post a Comment

0 Comments