Advertisement

Responsive Advertisement

மாநிலங்கள் வசம் 18.14 கோடி தடுப்பூசிகள் இருப்பு - மத்திய அரசு தகவல்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 18.14 கோடி தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. 

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கு இணங்க தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் வேகப்படுத்தி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 149.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

image

தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 154,32,62,955 டோஸ்கள் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள் வசம் 18,14,28,316 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. விரைவில் இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு கூடுதல் தடுப்பூசி அனுப்பப்பட உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3HHmIWT
via Read tamil news blog

Post a Comment

0 Comments