Advertisement

Responsive Advertisement

ம.பி: விளையாடிக் கொண்டிருந்தபோது கடித்துக் குதறிய தெருநாய்கள்- 3 வயது சிறுமி உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்துக் குதறியதில், அக்குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தார் மாவட்டத்தில் உள்ள பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற 3 வயது சிறுமி, நேற்று மாலை அந்தக் கிராமத்தில் உள்ள பண்ணை ஒன்றில் பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, திடீரென அங்கு வந்த சில தெருநாய்கள். அந்தச் சிறுமியை கடித்துக் குதற ஆரம்பித்துள்ளன. இதனால் செய்வதறியாது தவித்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டியடித்தனர்.

ஆனால், அதற்குள் தெருநாய்கள் கடித்ததில் சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அதிக அளவிலான ரத்தம் வெளியேறியது. இதையடுத்து உடனடியாக அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிறுமியை, பெற்றோர் கொண்டுச் சென்றனர். எனினும், சிறுமி நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளதாக, தரவுகள் தெரிவிக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அங்கு தொடாந்து நடைபெற்று வருவது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த மாதம் நெய்வேலி கோல்டன் ஜூப்ளி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qPWAmY
via Read tamil news blog

Post a Comment

0 Comments