Advertisement

Responsive Advertisement

'கொரோனா அதிகரிக்கிறது; ஆனாலும் பீதியடைய வேண்டாம்' – அரவிந்த் கெஜ்ரிவால்

'கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்' என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ''டெல்லியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் பீதி அடையத் தேவையில்லை.

image

தற்போது, டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,360. மூன்று நாட்களுக்கு முன்பு, அது 2,291 ஆக இருந்தன. டிசம்பர் 29 அன்று 923 கேஸ்கள்; டிசம்பர் 30 அன்று 1,313 கேஸ்கள்; டிசம்பர் 31 அன்று 1,796 கேஸ்கள், ஜனவரி 1 அன்று 2,716 கேஸ்கள். இன்று, 3,100 புதிய கேஸ்கள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று நாட்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன.

எனினும் ஒரே நாளில் 246 மருத்துவமனை படுக்கைகள் மட்டுமே நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்டாவை விட ஒமைக்ரான் தொற்று மிதமானது தான். ஆனாலும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், சோப்புடன் கைகளைக் கழுவவும், கவலைப்பட வேண்டாம்” என்று அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிக்க: சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pL0XiV
via Read tamil news blog

Post a Comment

0 Comments