Advertisement

Responsive Advertisement

மது அருந்திவிட்டு வண்டி ஓட்டினால் கைது செய்வீர்களா? - போலீஸிடமே கேட்ட மும்பை ’குடி’மகன்!

மும்பை காவல்துறையின் சமூகவலைதளங்கள் நெட்டிசன்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகிறது. காரணம், இந்த சமூக வலைதளங்களில் முக்கியமான சமூக பிரச்னைகள் கலந்தாலோசிக்கப்படுவதுடன், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காவல்துறையானது புத்திசாலித்தனம் மற்றும் நகைச்சுவையுடன் நெட்டிசன்களிடம் உரையாடி வருகிறது.

இன்று ட்விட்டர் ஷிவம் வஹியா என்ற பயனர் ஒருவர் காவல்துறையிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவுத்தின் ‘ஒயின் மது அல்ல’ என்ற கருத்தை மேற்கோள் குறிப்பிட்டு காட்டிய ஷிவம், ’’அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவரைக் கைது செய்வீர்களா அல்லது அருகிலுள்ள மதுக்கடையைக் காண்பிப்பீர்களா’’ என்று மும்பை போலீஸை டேக் செய்து கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சிவ சேனா தலைவர், "அப்படியானால் நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், @MumbaiPolice என்னை கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்துமா அல்லது அருகிலுள்ள மதுக்கடையைக் காட்டுமா?" என்று நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.

அதற்கு சூசகமாக மும்பை காவல்துறை, அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி பிடிபட்டால் சிறையில் அடைக்கப்படுவார் என்று பதிலளித்தது. அந்த ட்வீட்டில், ‘’சார், நீங்கள் மது அருந்தினால் ’பொறுப்பான குடிமகனாக’ ஓட்டுநர் ஓட்டும் காரில் செல்லுமாறு பரிந்துரை செய்கிறோம். இல்லையெனில் நீங்கள் குடித்த மதுவில் ஆல்கஹால் இருப்பது கண்டறியப்பட்டால் நீங்கள் கம்பிகளுக்குப் பின்னால் எங்களுடைய விருந்தினராக இருக்கவேண்டும்’’ என கூறியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மும்பை போலீஸ் இந்த நகைச்சுவையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/AGZCYwMad
via Read tamil news blog

Post a Comment

0 Comments