Advertisement

Responsive Advertisement

'நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரிப்பு' - ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஆளுநரின் குடியரசு தின வாழ்த்துக் குறிப்பில், ``அரசுப் பள்ளிகளின் நிலையைத் தனியார்ப் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் வரும் எதிர்மறையான வேறுபாடுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. ஏழை மாணவர்களால் தனியார்ப் பள்ளிகளில் கல்வி பயில்வதென்பது மிகக் கடினமான ஒன்று.

image

எனவே, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தினை மேம்படுத்துவது அவசரத் தேவையாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு முன் வரை 1 சதவீதத்திற்கும் குறைவான அரசுப்பள்ளி மாணவர்களே, அரசு மருத்துவமனைகளில் சேர்ந்தனர்.7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3fVXXdH
via Read tamil news blog

Post a Comment

0 Comments