
டெல்லியில் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் உடற்பயிற்சிக் கூட உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. ஆனால், உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்படுவதற்கான தடை விலக்கப்படவில்லை.
)
இதனால் தங்களுக்கு வருவாய் இழப்பு நேரிட்டுள்ளதாகக் கூறும் உடற்பயிற்சிக் கூடங்களின் உரிமையாளர்கள், டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MTH0xpsR8
via Read tamil news blog
0 Comments