Advertisement

Responsive Advertisement

”சட்டம் 370 ரத்துக்குப் பின் ஜம்மு காஷ்மீரில் 541 பயங்கரவாத தாக்குதல்”- உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு  541 பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்றும், அதில் பொதுமக்கள் 98 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் `சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதா?’ என்பது தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் பதிலளித்திருந்தார். அப்போது அவர் தெரிவித்த தகவலின்படி, “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தினம் தொடங்கி இன்று வரை, அதாவது 2019 ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 2022 ஜனவரி 26ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 541 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து உள்ளது. இந்த தாக்குதலின் போது 98 பொது மக்களும், 109 பாதுகாப்பு படையினரும் உயிரிழந்து உள்ளனர். இதே காலகட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 439 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
image
மேலும் இந்த தாக்குதல்களில் பொது சொத்துக்கள் எதுவும் சேதப் படுத்தப்படவில்லை என்றும், தனிநபரின் சொத்துக்கள் தோராயமாக 5.3 கோடி ரூபாய் அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முழு தகவல்களுக்கு, இங்கே க்ளிக் செய்யவும்
- நிரஞ்சன்குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/dXlPnxW6k
via Read tamil news blog

Post a Comment

0 Comments