Advertisement

Responsive Advertisement

இப்படித்தான் இருக்கும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில்! - 3டி வீடியோ வெளியீடு

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் பல கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. கடந்த 2020-இல் நடைபெற்ற இந்த கோவில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டியிருந்தார். வரும் 2025 வாக்கில் இந்த கோவிலின் முழு கட்டுமான பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

இந்நிலையில், இந்த கோவில் கட்டுமானம் நிறைவடைந்த பிறகு அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்ற 3டி ப்ரிவியூ வீடியோ வெளியாகி உள்ளது. சுமார் 6.14 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்ட இந்த வீடியோவில் கோவிலின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றம் என அனைத்தும் தெளிவாக காட்சியளிக்கிறது. 

கடந்த 2019-இல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சம்மந்தப்பட்ட இடத்தில் ராமருக்கு கோவில் எழுப்பி அனுமதி அளித்திருந்தது. அதை தொடர்ந்து இந்த கட்டுமான பணிகள் தொடங்கியது. 

ஐஐடி வல்லுநர்கள், டாட்டா குழுமம் மற்றும் எல் அண்ட் டி சிறப்பு பொறியியல் வல்லுநர்கள் இந்தக் கட்டுமான பணிக்கான திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/EUGzgHP
via Read tamil news blog

Post a Comment

0 Comments