Advertisement

Responsive Advertisement

நிதிநிலை அறிக்கையில் கவனம் ஈர்க்கும் மத்திய அரசின் அறிவிப்புகள் சில

2022-23 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்து முடித்திருக்கின்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில், கவனம் ஈர்க்கும் அரசின் சில அறிவிப்புகளை இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளுங்கள்.

  • நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றைக்கு ஏலம் நடைபெறும்.
  • டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. அதேநேரம் பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி வருமானங்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.
  • பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை தொடங்கப்படும்.
  • 2025ம் ஆண்டுக்குள் கண்ணாடி ஒளியிழை குழாய் மூலம் அனைத்து கிராமங்களுக்கு இணைய வசதி வழங்கப்படும்.
  • நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரு நாடு; ஒரே பதிவுமுறையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

image

  • நவீன தொழில்நுட்பத்துடன் 'சிப்' பொருத்திய இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்
  • ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்படும்
  • 200 கல்வி தொலைக்காட்சிகள் மாணவர்கள் மாநில மொழியில் கல்வி கற்பதற்காக உருவாக்கப்படும். இதுமட்டுமன்றி டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். இவைமட்டுமன்றி 1-12ம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் எனவும், பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்
  • 75 மாவட்டங்களில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட் ஏற்படுத்தப்படும்
  • மாநிலங்களுக்கு உதவ 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

  • 2023-க்குள் 2,000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
  • வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டில் 22,000 கி.மீ. தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்

image

  • அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலைக்காக ரூபாய் 2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

முழு விவரம் அறிய: மத்திய பட்ஜெட் 2022-2023: முக்கிய அம்சங்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9MiyWwsD6
via Read tamil news blog

Post a Comment

0 Comments