Advertisement

Responsive Advertisement

முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் -கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் அந்த மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உரையாற்றினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்பதுதான் கேரளாவின் நிலை என்று அப்போது ஆளுநர் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தனது உரையில் குறிப்பிட்ட ஆளுநர், ஆற்றில் புதிய அணை கட்டப்படும் என்றும் இதுதொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே முல்லைப் பெரியாறில் புதிய அணையை அரசு கட்ட இருப்பதாகவும் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: இந்திய சிறைகளில் இருந்த 12 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/qw2W6lR
via Read tamil news blog

Post a Comment

0 Comments