Advertisement

Responsive Advertisement

`யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது’- பாஜக சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

`ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது. அதற்கு வாய்ப்பில்லை’ என பாஜக சுப்பிரமணியன் சுவாமி காஞ்சிபுரம் மணி மண்டபத்தில் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது. ஏனெனில், அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளேன். இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என கூறி வருகிறார்கள். யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது. முதல் மனுவில் சேது சமுத்திரத் திட்டத்தை தொடக் கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

image

பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது அது முடிந்துவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறுமா என்று கேட்டதற்கு அவர் நடைபெற வாய்ப்பில்லை நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சுப்பிரமணியன் சுவாமி, இந்துத் தலைவர் ஸ்ரீ வேதானந்தனத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் நேரில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்தி: `ஆவணங்கள் இல்லை’- சசிகலாவின் உறவினர் மீதான பணமோசடி வழக்கு தள்ளுபடி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9BlxuqI
via Read tamil news blog

Post a Comment

0 Comments