Advertisement

Responsive Advertisement

கேரளா: கொடியேற்றத்துடன் தொடங்கிய சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா

சபரிமலை ஐயப்பனின் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சபரிமலையில் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டு வருகிற 19ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

image

இந்நிலையில் சபரிமலையில் ஆராட்டு திருவிழா தற்போது கொடியேற்றத்துடன துவங்கியுள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். மார்ச் 18ஆம் தேதி பம்பை நதியில ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது.

தொடர்ந்து தமிழ் மாதத்தின் சித்திரை மாத பூஜை மற்றும் மலையாள மாதத்தின் மீனம் மாத பூஜை மார்ச் 15ல் மாதாந்திர தரிசனம் துவங்கும். இதில், தினசரி முன்பதிவு செய்யும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

image

ஆராட்டு திருவிழாவிற்காக சபரிமலை நடை திறக்கப்பட்டதையொட்டி இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/g5xoOrB
via Read tamil news blog

Post a Comment

0 Comments