Advertisement

Responsive Advertisement

'இந்தியாவிடம் இருந்து பெற்ற கடன் தவறாக செலவழிப்பு' - இலங்கை எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

இந்தியா அளித்த கடனுதவியை இலங்கை அரசு தவறான வழியில் பயன்படுத்துவதாக அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இக்குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இந்தியா தந்த பணத்தை கொண்டு அரசியல் ஆதாயம் அடையும் வகையில் 14 ஆயிரம் கிராமங்களில் கடைகள் அமைத்து வருவதாக ஆளுங்கட்சி மீது சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். உணவகங்களிலும் பெட்ரோல் பங்க்குகளிலும் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு பலன் தரும் வகையில்தான் அப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

image

மேலும் கடனுதவி விவகாரத்தில் இந்தியாவுடன் இலங்கை அரசு சில ரகசிய உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அது குறித்து அரசு வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். அன்னியச் செலவாணி பற்றாக்குறை பிரச்னையில் தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா கடந்த வாரம் 7,500 கோடி ரூபாய் கடனுதவி அளித்திருந்தது.

இதையும் படிக்க: கடும் பொருளாதார நெருக்கடியால் நாடுகளிடம் அடுத்தடுத்து கடனுதவி கோரும் இலங்கை அரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/P9jIbhf
via Read tamil news blog

Post a Comment

0 Comments