Advertisement

Responsive Advertisement

திடீரென ஒத்திவைக்கப்பட்ட இந்திய விமானப்படை பயிற்சி: காரணம் என்ன?

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படை நடத்தவிருந்த பயிற்சி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடெங்கும் 3 ஆண்டுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் ராஜஸ்தானின் பொக்ரானில் இந்திய விமானப்படை பயிற்சி செய்வது வழக்கம். இந்தாண்டுக்கான பயிற்சியை 148 விமானங்களுடன் நாளை மறுநாள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் எனக் கூறப்பட்டிருந்தது. ரஃபேல் விமானங்கள் முதல் முறையாக இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களும் கூறப்படவில்லை. முன்னதாக குஜராத்தின் காந்தி நகரில் வரும் 10ஆம் தேதி தொடங்கவிருந்த பாதுகாப்புத்துறை கண்காட்சியும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/NilbLGP
via Read tamil news blog

Post a Comment

0 Comments