Advertisement

Responsive Advertisement

``ஆளுநர் உரையின்றி நடந்த தெலுங்கானா பேரவை கூட்டம்... மக்களுக்காக விட்டுட்டேன்”- தமிழிசை

“தெலுங்கானவில் ஆளுநர் உரையில்லாமல் சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியிருப்பதைக் நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மக்களுக்காக அதை நான் விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்” என தெலுங்கனா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா இல்லாத நாடாக இன்று இந்திய உள்ளது. அதற்கு காரணம் 180 கோடி தடுப்பூசி செலுத்தியது தான். அதற்கு காரணம் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்பு தான். தொடர்ச்சியாக இனிவரும் நாள்களிலும் அனைவரும் முகக்கவசம் கட்டாய அணிய வேண்டும்.

தெலுங்கானவில் ஆளுநர் உரையில்லாமல் சட்டமன்ற தொடங்கியிருப்பதைக் நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மக்களுக்காக அதை நான் விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

image

ஒரே நாடு - ஒரே தேர்தல் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. மார்ச் 27 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தின் விமான சேவை தொடங்க இருக்கிறது. அதற்கு பிரதமருக்கும், விமான துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரி வளர்ச்சிக்கு விமான சேவை முக்கியமாக இருக்கும். இந்த விமான சேவைக்காக நாங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டோம். அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி சுற்றுலாதுறை வளர்ச்சியடைவதற்கும், புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர், நாகை, திருவாரூர் மக்களுக்கு இது உதவிகரமாக அமையுமென தெரிவித்தார். மேலும் புதுச்சேரி - பெங்களூர், பெங்களூர் - ஹைதராபாத் நகருக்கும் நான் முதல் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

மேலும் குடியரசு தலைவர் பதவிக்கு உங்களின் பெயர் பரீசிலிக்கப்படுவதாக சொல்லபடுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன். நான் ஒரு சாதாரண குடிமகன், அவ்வளவு தான்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்தி: ஐபிஎல் 2022: புதிய ஜெர்ஸியை வெளியிட்ட மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FThJ9g
via Read tamil news blog

Post a Comment

0 Comments