Advertisement

Responsive Advertisement

பாலியல் குற்றங்கள் அதிகரிக்க லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பும் காரணம் - ம.பி. உயர்நீதிமன்றம்

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பாலியல் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பாலியல் தொழிலை ஊக்குவிப்பதாக மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 25 வயது இளைஞனின் முன் ஜாமீன் மனுவை நிராகரிக்கும்போது பேசிய, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சின் நீதிபதி சுபோத் அபியங்கர் “லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பாலியல் குற்றங்களை அதிகரிக்கச் செய்து பாலியல் தொழிலை ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

Courts must understand that 'live-in' relationships don't need to conform to norms of marriage | The Indian Express

வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருடன் காதல் வயப்பட்டு 2 வருடங்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். அப்போது அந்தப் பெண் 2 முறை கர்ப்பம் அடைந்த போதிலும், காதலன் வற்புறுத்தலின் பேரில் கருவை கலைத்துள்ளார். இருவருக்கும் இடையேயான “லிவ்-இன்” உறவு முறிந்தபோது, அந்தப் பெண் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அப்போது அவரது லிவ் - இன் காதலன் அந்த பெண்ணை மிரட்டத் துவங்கியுள்ளார்.

அந்த பெண்ணின் வருங்கால மாமியாருக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி வீடியோ அனுப்பியுள்ளார். தனது சாவுக்கு அந்த பெண்ணின் குடும்பத்துடன் தாங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மிரட்டியதால் பீதியடைந்த மாமியார், திருமணத்தையே ரத்து செய்துவிட்டார். இதையடுத்து அந்தப் பெண் காதலன் மீது பாலியல் வன்கொடுமை புகாரளிக்க, முன் ஜாமீன் கோரி காதலன் ம.பி. உயர்நீதிமன்றத்தை நாடினார்.

Make Indore Bench Of NCLT Functional At Least For 2 Days A Week: Madhya Pradesh High Court To Centre

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காதலனுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் குறித்து தனது காட்டமான கருத்துகளையும் பதிவு செய்தது. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சின் நீதிபதி சுபோத் அபியங்கர் “சமீபகாலமாக லிவ்-இன் உறவுகளால் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனப் பிரிவு 21 வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த பிரிவின் ஒரு மோசமான எதிர்விளைவு தான் லிவ்-இன் ரிலேஷன்ஷிப். இந்த சட்டப்பிரிவின் மோசமான விளைவால் இந்திய சமூகத்தின் நெறிமுறைகளை மூழ்கடித்து, காம நடத்தையை ஊக்குவித்து பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும்” என்று தன் உத்தரவில் குறிப்பிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/r9e1Eol
via Read tamil news blog

Post a Comment

0 Comments