Advertisement

Responsive Advertisement

உத்தராகண்ட் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளை மீட்ட ராணுவ வீரர்கள்

உத்தராகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகளை ராணுவ வீரர்கள் காப்பாற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் பூல் சாட்டி என்ற இடத்தில் சாகச நீர் பயணத்தில் ஈடுபட்டிருந்த சிறுமிகள், தங்கள் படகுகளில் இருந்து தவறி விழுந்ததாகத் தெரிகிறது. அவர்கள் உயிர்காக்கும் உடை அணிந்திருந்ததால், நீரினுள் மூழ்கவில்லை. அதேநேரத்தில் ரிஷிகேஷ் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

2 girls fell into river during rafting, and then such a miracle happened that a new life was found | NewsTrack English 1

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அந்த சிறுமிகளை கயிறை வீசி மீட்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கரையில் நின்றிருந்த ராணுவ வீரர்கள் இருவர் துணிச்சலுடன் ஆற்றில் குதித்து இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். மிகுந்த துணிச்சலுடன் சிறுமிகளை ராணுவ வீரர்கள் காப்பாற்றிய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன்னுயிரை பொருட்படுத்தாமல் சிறுமிகளை காப்பாற்றிய ராணுவ வீரர்களின் செயலுக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.


இதையும் படிக்க:தஞ்சையை தொடர்ந்து நாகையிலும் சப்பரத்தேர் விபத்து சோகம் - ஒருவர் பலி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/sFz3L4b
via Read tamil news blog

Post a Comment

0 Comments