Advertisement

Responsive Advertisement

குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு எதிரான மனு: பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

குற்றவியல் நடைமுறை அடையாள சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்ட ஒருவரின் உயிரியல் மாதிரிகளான கை விரல் மற்றும் கால் விரல் ரேகைகள், கருவிழி அடையாள புகைப்படங்கள் உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் ஆகியவற்றை சேகரிக்க வழி வகை செய்யும் சட்ட மசோதா நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் நிறைவேற்றப்பட்டது.

image

ஏப்ரல் 4-ஆம் தேதி மக்களவையிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில் சட்டத்துறை சார்ந்த மறுஆய்வு இந்த புதிய சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி ஹர்சித் கோயல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரித்தபோது, மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய உள்துறை மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/tnx0mhc
via Read tamil news blog

Post a Comment

0 Comments