Advertisement

Responsive Advertisement

ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2-4 தேதிகளுக்கு இடையே பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2022 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி  மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவரது பயணத்தின் போது, பெர்லினில் பிரதமர் மோடி ஜெர்மனியின் அதிபர்  ஓலாஃப் ஷோல்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், இந்த 2 தலைவர்களும் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (ஐஜிசி) 6வது பதிப்பிற்கு இணைத் தலைவராக இருப்பார்கள்.

image

அதன்பிறகு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்குச் செல்கிறார். அப்போது டென்மார்க் அரசு நடத்தும் 2வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இறுதியாக மே 4 ஆம் தேதி பிற்பகலில் இந்தியா திரும்பும் பயணத்தின் போது பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்திப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிக்க:“அதிகரித்து வரும் மின் தேவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது” - மத்திய அரசு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/V6rzF7O
via Read tamil news blog

Post a Comment

0 Comments