Advertisement

Responsive Advertisement

பீகாரில் திடீர் திருப்பம் - எதிர்க்கட்சி அளித்த இஃப்தார் விருந்தில் பாஜக ஆதரவு முதல்வர்

பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த இஃப்தார் விருந்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார்.

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பாட்னாவில் தனது இல்லத்தில் இஃப்தார் விருந்து அளித்தார். இதில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சருக்கு தேஜஸ்வியும், அவரது தாய் ராப்ரி தேவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

image

பாரதிய ஜனதாவுடன் சுமூக உறவுகள் இல்லாத நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார் வரும் நிலையிலும், நிதிஷ் குமாரின் இச்செயல் அரசியல் ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் பீகாரில் அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் வென்றிருந்தது. 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணியில் பாஜகவுக்கு 77 உறுப்பினர்களும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 உறுப்பினர்களும் உள்ளனர். எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 76 உறுப்பினர்கள் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/mD9wyCe
via Read tamil news blog

Post a Comment

0 Comments