Advertisement

Responsive Advertisement

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

பிரான்ஸ் அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மெகரான், மெரின்லி ஆகிய இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். அவர்களில் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாததால், இன்று இரண்டாம் கட்டமாக பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

image

இத்தேர்தலில் புதுச்சேரி மற்றும் சென்னையில் 4,564-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதையடுத்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி என இரண்டு இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், காரைக்காலிலும் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/O4kaTnG
via Read tamil news blog

Post a Comment

0 Comments