Advertisement

Responsive Advertisement

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு ஜூன் 9 வரை காவல்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனங்களான பிரயாஸ், அகிசந்த் டெவலப்பர்ஸ், மங்கள்யத்தன் ஆகிய நிறுவனங்களில் அமைச்சர் ஜெயின் மற்றும் அவரது மனைவிக்கு மூன்றில் ஒரு பகுதி பங்குகள் உள்ளதாக கூறியும், போலியான நிறுவனங்கள் மூலம் நிதி மோசடி நடத்தியதாக கடந்த 2018-ம் ஆண்டு சிபிஐ சத்தியந்திர ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் நேற்றய தினம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சத்தியேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகு இன்று டெல்லி ரோஸ் அவன்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா ராஜேந்திரனிடம் விசாரணை நடத்த 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

image

சத்தியந்திர ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிகரன், சத்தியந்திர ஜெயின் தரப்பில் இருந்து ஹவாலா பணம் சென்றதற்கான ஆதாரம் அமலாக்கத்துறையிடம் இல்லை என்றும், இருப்பினும் சத்தியந்திர ஜெயின் சொந்தமான இல்லங்களில் இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டு அவரது வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ள நிறுவனங்களில் ஆலோசகராக மட்டுமே இருந்ததாகவும் நிறுவனங்கள் செய்யும் வேலைகளுக்கு தான் பொறுப்பாக மாட்டேன் என வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே அமலாக்கத் துறையினரின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 9ம் தேதி வரை அமலாக்கத்துறை சத்தியந்திர ஜெயினை காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MgPZzDT
via Read tamil news blog

Post a Comment

0 Comments