Advertisement

Responsive Advertisement

ரம்ஜான் பண்டிகை அன்று ஊரடங்கு - எந்த மாநிலத்தில் தெரியுமா?

மத்திய பிரதேசத்தில் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் கடந்த மாதம் நடைபெற்ற ராமநவமி நிகழ்ச்சியில் இருதரப்பு மக்களிடையே பயங்கர வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். 24 பேர் படுகாயமடைந்தனர்.

image

இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து நடைபெறும் பண்டிகைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை நாளை அல்லது நாளை மறுதினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, கலவரம் நடந்த கார்கோன் மாவட்டத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

image

அதேபோல, அன்றைய தினத்தில் அட்சய திருதியை பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/iXfW1j3
via Read tamil news blog

Post a Comment

0 Comments