Advertisement

Responsive Advertisement

'என்னை தொடாதே, நீ தீண்டத்தகாதவன்' - மத சொற்பொழிவாளரின் மேடை பேச்சால் பரபரப்பு

பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி எனும் மத சொற்பொழிவாளரின் கால்களில் விழ முயன்ற ஒருவரிடம், "என்னைத் தொடாதே, நீ தீண்டத்தகாதவன்" என அவர் கூறியது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்ற மத சொற்பொழிவாளர், தனது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயலும் ஒருவரை தீண்டத்தகாதவன் என்று அழைக்கிறார். மேலும், அந்த நபர் பாதங்களைத் தொட முயன்றபோது, தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, "என்னைத் தொடாதே" என்று கூறி கால்களை தூக்கிக்கொண்டு பின்னால் சாய்ந்தார்.

dhirendra krishna shastri another video says unki thathari in bundeli in front of govind singh rajput dvmp | कथावाचक धीरेंद्र शास्त्री का दूसरा वीडियो आया, बोले- हम पर कार्रवाई चाहने ...

இந்த பாரபட்சமான நடத்தையை கண்டு பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். #ArrestDhirendraShastri  என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இதற்கு முன்பும் அவர் தனது பேச்சின் மூலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் இவர். சில வாரங்களுக்கு முன்பு மேடையில் பேசிய இவர்,  "நீங்கள் இப்போது விழிக்கவில்லை என்றால், உங்கள் கிராமத்திலும் நீங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும், எனவே அனைவரும் ஒன்றிணைந்து கல் எறிபவர்களின் வீட்டை புல்டோசர்களை கொண்டு இடிக்க வேண்டும். சனாதனிகளின் தேசத்தில், ராம நவமியில் யாராவது கல்லெறிகிறார்கள் என்றால், அனைத்து இந்துக்களும் விழித்து ஒன்றுபடுங்கள், உங்கள் கைகளில் ஆயுதம் ஏந்தி, இந்துக்களாகிய நாம் ஒன்று என்று கூறுங்கள்" என்று கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Dzunpaw
via Read tamil news blog

Post a Comment

0 Comments