Advertisement

Responsive Advertisement

நேற்று அமித் ஷா உடன் சந்திப்பு - இன்று திரிபுரா முதல்வர் பதவியிலிருந்து பிப்லாப் ராஜினாமா

பாஜக கட்சியைச் சேர்ந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திரிபுராவில் 25 ஆண்டுகாலமாக இடதுசாரி கட்சி ஆட்சி அமைத்து வந்தநிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கடந்த 2018-ம் ஆண்டு பிப்லாப் குமார் தேப் தலைமையில் பாஜக கட்சி ஆட்சிப் பிடித்து சாதனை புரிந்தது. இதையடுத்து திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பிப்லாப் குமார் தேப் பதவி வகித்து வந்தார்.

இதற்கிடையில், சர்ச்சை பேச்சு, சர்ச்சை கருத்துக்கள் என கூறி வந்ததாக பிப்லாப் குமார் தேப் மீது கட்சிக்குள் அதிருப்தி இருந்து வந்துள்ளது. சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர் முதல்வராக தொடரக்கூடாது என கட்சித் தலைமையிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று டெல்லியில் உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷாவை பிப்லாப் குமார் தேப் சந்தித்து பேசினார். வழக்கமான மாநில சம்பந்தமான பேச்சுக்களே பேசியதாக கூறப்பட்டநிலையில், இன்று காலைதான் பிப்லாப் குமார் தேப், அகர்தலா திரும்பினார்.
இந்நிலையில், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துளளார்.

image

இதையடுத்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி, தற்போது மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றுகூடி தேர்வு செய்ய உள்ளனர். திரிபுரா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/eqlcP2Y
via Read tamil news blog

Post a Comment

0 Comments