Advertisement

Responsive Advertisement

நவீன புறாவாக மாறிய 'ட்ரோன்'... ட்ரோன் மூலம் பார்சல் விநியோகித்து தபால் துறை சாதனை

மன்னராட்சி காலத்தில் புறா மூலம் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் அச்சேவையை வழங்க தொடங்கியுள்ளது இந்திய தபால் துறை. முதல் முறையாக, ட்ரோன் மூலம் பார்சல் ஒன்றை விநியோகம் செய்து இந்திய தபால் துறை சாதனை படைத்துள்ளது.

Image

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இந்த சாதனை நிகழ்ந்தப்பட்டுள்ளது. ஹபே என்ற கிராமத்தில் இருந்து நெர் என்ற கிராமத்திற்கு ட்ரோன் மூலம் மருத்துவம் சார்ந்த பார்சல் அனுப்பப்பட்டதாகவும், அது 25 நிமிடத்தில் 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

இதன் மூலம் எதிர்காலத்தில் ட்ரோன்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என என இந்திய தபால் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த சோதனை வணிக ரீதியாக வெற்றியடைந்தால், தபால் டெலிவரி சேவைகள் வேகமாக இருக்கும் என்றும் தபால் துறை கூறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/hEK0SXm
via Read tamil news blog

Post a Comment

0 Comments