Advertisement

Responsive Advertisement

குதுப் மினார் விவகாரத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை: மத்திய அமைச்சர் விளக்கம்

உத்தரப்பிரதேசத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் குதுப் மினார் விவகாரத்திலும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

டெல்லியிலுள்ள குதுப் மினாரை குத்புதீன் ஐபக் கட்டவில்லை என்றும் சூரிய ஒளியின் திசை பற்றி ஆராய்வதற்காக ராஜா விக்ரமாதித்யா கட்டியதாகவும் தொல்பொருள் துறையின்  முன்னாள் அதிகாரி கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரத்தில்  27 ஹிந்து கோயில்களை இடித்து அதிலிருந்து பெறப்பட்ட பொருட்களை வைத்து குதுப் மினார் கட்டப்பதாகவும் அது விஷ்ணுவின் தூண் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியிருந்தார்.

image

இதையடுத்து குதுப் மினார் பகுதியில் அகழ்வாய்வு நடைபெறவுள்ளதாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி மறுத்துள்ளார். அதுபோன்ற முடிவை அரசு எடுக்கவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: 'பாஜகவுக்கு வாக்களிக்காதவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்' - ராகுல் காந்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/VHkYvZ7
via Read tamil news blog

Post a Comment

0 Comments