Advertisement

Responsive Advertisement

'சவால் மிகுந்த சூழல்'- ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ஐரோப்பிய பயணத்தின் முதல் கட்டமாக ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக இன்று ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெர்மனி இந்தியா இடையேயான ஆறாவது கூட்டுக் கூட்டத்தில் ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஷோல்ஸுடன் இணைந்து பங்கேற்கும் பிரதமர் மோடி, இரு நாடுகளைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளுடனும் கலந்துரையாடுகிறார்.

image

இதையடுத்து, இந்திய வம்சாவளியினருடனும் பிரதமர் மோடி உரையாடுகிறார். முன்னதாக தனது பயணம் குறித்த அறிக்கையை வெளியிட்ட பிரதமர், சவால் மிகுந்த ஒரு சூழலில் தனது ஐரோப்பிய பயணம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் பயணத்தின்போது ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் விவரிப்பார் என வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: மேற்கு வங்கத்தில் நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம் - பரபரப்பு சம்பவம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/KuSHp8M
via Read tamil news blog

Post a Comment

0 Comments