Advertisement

Responsive Advertisement

டிவி, ஏசியை முழுமையாக அணைக்காவிட்டால் ஆண்டுக்கு ரூ.1000 கூடுதல் மின்கட்டணம் கட்ட நேரிடுமா?

டி.வி, ஏ.சியை பயன்படுத்திய பிறகும் முழுமையாக அணைக்காமல் விட்டு விட்டால், ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மின்னணு பொருட்கள் பலவற்றை ரிமோட் மூலம் இயக்கும் நிலையில், பயன்படுத்திய பிறகு அவற்றின் சுவிட்ச்களை பலரும் ஆஃப் செய்யாமல் வைத்திருக்கின்றனர். இதுதொடர்பாக தனியார் அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில், டிவி, சவுண்ட் சிஸ்டம், ஏசி உள்ளிட்டவைகளை பயன்படுத்திய பிறகு ஸ்விட்ச்கள் ஆனில் வைத்திருந்தால் அவை தொடர்ந்து மின்சாரத்தை இழுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/BimjVkiqKSc" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

இதனால் ஆண்டுக்கு 174 யூனிட் மின்சாரம் கூடுதலாக செலவாகும் என்றும் இதற்காக கூடுதலாக ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்
எனவும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. டிவி, ஏசி ஸ்விட்ச்களை எப்போதும் ஆனில் வைக்கும் நபர்களாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு அறிவுரையும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். மின்னணு பொருட்களை பயன்படுத்தியபின் ஸ்விட்ச்களை ஆஃப் செய்ய அந்த ஆய்வில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/LRvzb2C
via Read tamil news blog

Post a Comment

0 Comments