Advertisement

Responsive Advertisement

வெளிநாட்டு மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்கள் - சென்னைக்கு எந்த இடம்?

வெளிநாட்டு மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்களின் பட்டியலில் மும்பை, பெங்களூரு, சென்னை, டெல்லி இடம்பெற்றுள்ளன.

கல்வி என்பது நாடுகளை கடந்தது. இந்தியாவில் இருந்து எப்படி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை பயின்று வருகிறார்களோ, அதேபோல் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து படித்து வருகிறார்கள். நல்ல கல்வித்தரம், செலவு ஆகியவற்றின் அடிப்படையில் நாடு கடந்து மாணவர்கள் படிக்கச் செல்கின்றனர்.

image

வெளிநாட்டு மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய நகரங்களின் தரவரிசை பட்டியலை 'கியூ.எஸ்' வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு மாணவர்களுக்கான முதல் 140 நகரங்களின் பட்டியலில் மும்பை, பெங்களூரு, சென்னை மற்றும் டெல்லி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

image

இந்திய நகரங்களை பொறுத்தவரை மும்பை முதலிடத்திலும், அதனை தொடர்ந்து பெங்களூரு 114-வது இடத்திலும், சென்னை (125) மற்றும் டெல்லி (129) உள்ளன. இந்த ஆண்டு சென்னை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநகரங்களும் புதிதாக இடம்பிடித்துள்ளன.

2023ம் ஆண்டிற்குள்  இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை இரண்டு லட்சம் ஆக இருக்கும் என இந்திய அரசு தரப்பில் நம்பப்படுகிறது. இது நடப்பு ஆண்டை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும். 2018-19 ஆம் ஆண்டில் சேர்க்கையானது 47,427 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்கலாம்: ஆதாருடன் பான் எண்ணை இணைத்துவிட்டீர்களா? இனி இரு மடங்கு அபராதம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/K9Vl2Qj
via Read tamil news blog

Post a Comment

0 Comments