Advertisement

Responsive Advertisement

உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலும் இன்றும் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

பல பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம் இதோ! 

  • ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டிருந்த பிராண்டு(முத்திரை) இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்க கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Curd, paneer, other pre-packed & labelled food items to attract GST » News Live TV » India

  • முத்திரையில்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை காய்கறிகள், கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • அதேநேரம், பொட்டலமிடப்படாத முத்திரையற்ற பொருள்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lemon Tree Hotel, Chennai Hotel Rooms – Accommodation Options in Chennai

  • ஹோட்டல்களில் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வாடகை உள்ள அறைகளுக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Bank Customer Alert: Cheque Books of These Banks Will Not be Valid From Oct 1 | Details Here

  • காசோலைகளுக்கு வங்கி விதிக்கும் கட்டணத்தில் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அட்லஸ் வரைபடம், விளக்கப்படங்களுக்கு 12 சதவிகிதமும் ஜிஎஸ்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Best World Atlas in 2022 | Mappr

  • சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்இடி விளக்குகள், அச்சிடும் மை, தோல் பொருட்கள் மற்றும் சோலார் வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பல பொருட்களுக்கான தலைகீழ் வரி கட்டமைப்பில் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

இதுதவிர, இன்று ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரை பந்தயம் உள்ளிட்டவைகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/cS8Wa7O
via Read tamil news blog

Post a Comment

0 Comments