Advertisement

Responsive Advertisement

கொரொனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை 'நோ பிளை லிஸ்ட்' சேருங்கள் - டெல்லி நீதிமன்றம்

முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரொனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை 'நோ ஃப்ளை லிஸ்ட்' என அழைக்கப்படும் விமானம் பயணம் மேற்கொள்வதற்கான தடை விதிக்கப்பட்ட நபர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை வேண்டும் என தேசிய விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் சமீபமாக விமான பயணம் மேற்கொண்ட பொழுது கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து எழுப்பிய புகார் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சாங்கி, மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

image

கொரோனா இன்னும் முழுமையாக முடிவிற்கு வராத நிலையில் விமானங்கள் போன்ற முழுவதும் மூடப்பட்ட இடங்கள் அல்லது அமைப்புகளில் கொரோனா விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது என்பது அவசியமாகிறது. எனவே இத்தகைய விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை விமான போக்குவரத்து இயக்குநரகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், இது சம்பந்தமாக விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிறுவன ஊழியர்களுக்கு உரிய தகவல்களை வழங்கவேண்டும் என்றும், தேவைப்பட்டால் விதிமுறைகளை பின்பற்றாத பயணியை விமானத்திலிருந்தும் விமான நிலையத்தில் இருந்தும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

image

மேலும் சம்பந்தப்பட்ட பயணியின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும், ’நோ ஃப்ளை லிஸ்ட்’ எனப்படும் விமான பயணம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்ட நபர்கள் பட்டியலில் சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உணவு சாப்பிடும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் முகக் கவசம் கட்டாயம் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மீண்டும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறினார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/mp6ZKXU
via Read tamil news blog

Post a Comment

0 Comments