Advertisement

Responsive Advertisement

கிரெடிட் கார்டு செலவீனங்கள் அதிகரிப்பு - பொருளாதாரம் மீள்வதாக ரிசர்வ் வங்கி கருத்து

கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பது சென்ற மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதை பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியதன் அறிகுறியாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியதன் அறிகுறியாக சென்ற மே மாதத்தில் கிரெடிட் கார்டுகள் முலம் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளார்கள் செலவழித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது முந்தைய 2021ஆம் ஆண்டின் இதே மாதத்தில் செலவிட்டதை விட 118 சதவிகிதம் அதிகமாகும்.

ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு செலவழித்தது, சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதற்காக செலவழித்தது போன்றவை அதிகரித்ததே காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டில் மூலம் கடன்பெற்று செலுத்தாமல் இருப்பதும் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/m7taS9n
via Read tamil news blog

Post a Comment

0 Comments