Advertisement

Responsive Advertisement

அக்னிபாத் - வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்தே இழப்பீடு பெற உ.பி. அரசு நடவடிக்கை

உத்தரப் பிரதேசத்தில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடம் இருந்தே இழப்பீட்டை பெற அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது சொத்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. இதில் பல கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டது.

image

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் அக்னிபாத்துக்கு திட்டத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர். இவ்வாறு இதுவரை 1,120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவானவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்நிலையில், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டோர் சேதப்படுத்திய பொது சொத்துகளுக்கான இழப்பீட்டை அவர்களிடம் இருந்தே பெறுவதற்கு உ.பி. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்டோரின் முகவரிக்கு நோட்டீஸைும் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/36RfETk
via Read tamil news blog

Post a Comment

0 Comments