Advertisement

Responsive Advertisement

ஒரு நாள் முழுவதும் கழிவறையில் இருந்த மனைவியின் சடலம்.. கணவன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

மனைவியை கொன்று அவரது சடலத்தை கழிவறையில் கணவன் மறைத்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.

டெல்லியின் கபில் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (38). நேற்று (ஜூன் 18) அவரே பல்ஸ்வா டெய்ரி காவல் நிலைய போலீசாரை தொடர்புகொண்டு தான் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக பரபரப்பு வாக்குமூலத்தை அளித்திருக்கிறார்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், துணியால் சுற்றப்பட்டிருந்த விஜய்யின் மனைவி சந்தோஷி தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

அதில், சந்தோஷி தேவிக்கு முன்பே விஜய்க்கு முதலில் திருமணமாகி அந்த தம்பதிக்கு 4 குழந்தைகளும் உள்ளன. ஆனால் இருவரும் பிரிந்து தனித்தனியே வந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கணவனை பிரிந்த சந்தோஷி தேவியை விஜய் மணமுடித்து ஒன்றாக வாழ்ந்திருக்கிறார். சந்தோஷி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

சந்தோஷிக்கு 14,13,12 வயதில் 3 பெண் குழந்தைகளும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. விஜய்யும், சந்தோஷியும் இணைந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.

image

இப்படி இருக்கையில், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் விஷயத்தில் விஜய்க்கும், சந்தோஷி தேவிக்கும் இடையே அவ்வப்போது சண்டை மூண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் சம்பவம் நடந்த தினத்தன்று (ஜூன் 17), மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு மாலை சந்தோஷி வீடு வந்து சேர்ந்திருக்கிறார். அப்போது, குழந்தைகள் தூங்கிய பிறகு இரவு 11.30 மணியளவில் தேவிக்கும், விஜய்க்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இடைவிடாத சண்டையில் ஆத்திரமடைந்த விஜய், சந்தோஷி தேவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரது உடலை துணியால் சுற்றி ஒரு நாள் முழுவதும் கழிவறையில் அடைத்திருக்கிறார்.

வெகுநேரம் வீட்டிலேயே சடலத்தை வைத்திருக்க முடியாமல் போனதால் வேறுவழியின்றி ஜூன் 18 இரவு 8.45 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்று தனது மனைவியை கொன்றுவிட்டதாக விஜய் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ALSO READ: 

ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி: என்ன செய்தார் ரயில்வே காவலர்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/h1Tca2M
via Read tamil news blog

Post a Comment

0 Comments