Advertisement

Responsive Advertisement

தெற்கு ரயில்வேயில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு முறியடிப்பு - சு.வெங்கடேசன் M.P

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் தெற்கு ரயில்வே காலிப் பணியிடங்களில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும் தற்போது சென்னை தேர்வர்கள் அனைவருக்கும் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தனது போராட்டத்துக்கு கிடைத்த முழு வெற்றி என்றும் சு.வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “சென்னை ஆர் ஆர் பி தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டு விட்டு கோரக்பூர் தேர்வர்கள் 55 பேரை நியமிக்க எடுத்த முடிவு எனது தலையீட்டின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு தெற்கு ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் இருந்த 17 பேருக்கு முதலில் வேலை அளிக்கப்பட்டது. இப்போது மீதி 39 பேருக்கு வேலை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து சென்னை ஆர் ஆர் பி தேர்வர்களும் வேலை பெறுகிறார்கள்.

Image

இதன் மூலம் இனி சம்பந்தப்பட்ட ரயில்வேயைச் சேர்ந்தவர்களை விட்டுவிட்டு வேறு ரயில்வே தேர்வர்களை நியமிக்கும் பழக்கம் எதிர்காலத்தில் கைவிடப்படும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இத்துடன் மெரிட்டில் தேர்வாகி மருத்துவ தகுதி மறு ஆய்வில் தகுதி பெற்ற ஐந்து பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியல் தேர்வர்களின் பட்டியல் 2 ஆண்டுகளை தாண்டி விட்டதால் அவர்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை வைக்கப்படும் என்று தெரிகிறது. இதனை தாராள மனப்பான்மையுடன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையில் சேர இருக்கிற காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/gwSnhIt
via Read tamil news blog

Post a Comment

0 Comments