Advertisement

Responsive Advertisement

’கேக் கொடுத்து வேலை கேட்கும் பெங்களூர் இளைஞர்’ - வைரல் ட்வீட்டின் பின்னணி இதுதான்!

படித்து பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி செல்ல நல்ல வேலை தேவை. ஆனால் இந்தியாவில் அப்படியான படித்த படிப்புக்கு வேலை கிடைப்பது என்பதே குதிரைக் கொம்பாக உள்ளது.

இந்த நிலையில், தனக்கு வேலை கிடைக்க வேண்டி, விநோதமாக யோசித்து இளைஞர் செய்த செயல் நிறுவனங்களை தாண்டி
இணையவாசிகளையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறது.

பெங்களூருவை சேர்ந்த அமன் கந்தல்வால் என்ற இளைஞன், ஸொமேட்டோ டெலிவரி ஊழியரை போன்று நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளுக்கு உணவு டெலிவரி செய்வதுபோல சென்று அதில் தனது resume-ஐயும் இணைத்து கொடுத்திருக்கிறார்.

இப்படியாக பெங்களூருவில் உள்ள பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சென்று ஃபுட் டெலிவரி செய்வதுபோல தனது resume-ஐயும் கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அந்த இளைஞரே ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “ஸொமேட்டோ டெலிவரி பாய் போல சென்று என்னுடைய resume-ஐ pastry பாக்ஸில் வைத்து பல நிறுவனங்களிலும் கொடுத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு தனது linkedin profile-ஐயும் ஷேர் செய்திருக்கிறார்.

அதில் உள்ள ஃபோட்டோவில் ”பொதுவாக எல்லா resumeகளும் குப்பைக்குதான் போகும். ஆனால் என்னுடையது உங்கள் வயிற்றுக்கு போகும்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவரது புது உத்திக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், digital gurukul என்ற நிறுவனம் அமனின் ட்வீட்டுக்கு பதிலளித்து, தங்களது நிறுவனத்தில் ட்ரெய்னியாக வேலைக்கு சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

image

ஆனால் முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் லுகாஸ் என்ற இளைஞர் ஒருவர் அந்நாட்டில் பிரபலமான டெலிவரி நிறுவனமான postmates-ன் டி-ஷர்ட்டை அணிந்து donutகளை டெலிவரி செய்வது போன்று அதில் தனது resume-ஐ வைத்து வேலை கேட்டது பலரையும் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/NtJ2UF9
via Read tamil news blog

Post a Comment

0 Comments