Advertisement

Responsive Advertisement

’அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது’ - பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன்

ஆல்ட் நியூஸ் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

AltNews செய்தி இணையதளத்தின் இணை நிறுவனரான முகம்மது ஜுபைர், மதம் சார்ந்த விஷயங்கள் பற்றி தொடர்ச்சியாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவர் மதம் சார்ந்த சிலரது நம்பிக்கைகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் ஜுபைரை கைது செய்தனர். இவர் மீது டெல்லி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்படுதல்), 295ஏ (மத உணர்வுகளை தூண்டி சமூக அமைதியை சீர்குலைப்பது) ஆகியவற்றின் கீழ் ஜுபைர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை போலீசார் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

image

இந்நிலையில் முகம்மது ஜுபைர் ஜாமீன் கோரி பட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜுபைரின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும், இதே விவகாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிக்கலாம்: சுட சுட எண்ணெய்யை மகளின் அந்தரங்க பாகத்தில் ஊற்றிய உ.பி., பெண்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/xtihUy0
via Read tamil news blog

Post a Comment

0 Comments