Advertisement

Responsive Advertisement

'பக்ரீத் நாளில் பசுக்கள் வெட்டப்படக் கூடாது' -மகாராஷ்டிர டிஜிபிக்கு சபாநாயகர் கடிதம்

பக்ரீத் தினத்தன்று பசுக்கள் வெட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர், டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும். இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஏழைகளும் இறைச்சி உணவு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாமியர்கள் இறைச்சி தானம் செய்வது வழக்கம். இதற்காக ஆடு, மாடுகளை பலி கொடுத்து, மூன்றாக பிரித்து, ஒன்றை தம் குடும்பத்திற்கும், இரண்டாம் பகுதியை உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தானம் கொடுப்பர். இது குர்பானி எனப்படுகிறது.

image

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பக்ரீத் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், பக்ரீத் தினமான நாளை பசுக்கள் வெட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர், டிஜிபி ரஜ்னிஷ் சேத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிராவில் புதிதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் சபாநாயகரின் இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாம்: ”இதுக்கு எங்க அம்மாதான் சரிப்பட்டு வருவாங்க” -சம்பள பேரம் குறித்த டெக்கியின் வைரல் போஸ்ட்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1H4X2jp
via Read tamil news blog

Post a Comment

0 Comments