3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய இணை அமைச்சறர் அனுராக் தாக்கூர் இதுகுறித்த மசோதா தாக்கல் குறித்து அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், “முன்னுரிமை அடிப்படையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி: இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை: வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DNum0r
via Read tamil news blog
0 Comments