இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு பயங்கரவாத அமைப்பான ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் கவுதம் கம்பீர்.
அவரது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடியில் இந்த கொலை மிரட்டல் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கம்பீரின் தனிச் செயலர் போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புகார் பதிவு செய்திடவும் போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3r6hkYn
via Read tamil news blog
0 Comments