Advertisement

Responsive Advertisement

உ.பி.யில் காளை தாக்கி இறப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு - அகிலேஷ் யாதவ்

காளை மாடு முட்டி இறந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெல்ல பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்கட்சி, காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் மும்மரமாக உள்ளன. இதில் ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் பல சிறிய கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டணியை உறுதி செய்து விட்டார்.

image

இந்த நிலையில், தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால், காளை மாடு தாக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். பின்னர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சாலை விபத்தில் உயிரிழக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் உறுதியளித்தார்.

இதையும் படிக்க: கொரோனா கால மாணவர் நலன் 16: ‘திருமண வயது அதிகரிப்பு’ மசோதா உண்மையிலேயே மாற்றம் தருமா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3z8aqDT
via Read tamil news blog

Post a Comment

0 Comments