தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே நாளில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கேரளாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் மற்றவர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே நாடு முழுவதும் 358 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3FucLLI
via Read tamil news blog
0 Comments