Advertisement

Responsive Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை

சபரிமலையில் மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி மகா தீபாராதனை காட்டும் நிகழ்வு இன்று மாலை நடைபெறவுள்ளது.

41 நாள் நடைபெறும் மண்டல பூஜை நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி திருவிதாங்கூர் சித்திரைத்திருநாள் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. தென்காசி, செங்கோட்டை வழியாக வரும் இந்த ஊர்வலம் இன்று மதியம் பம்பை வந்தடையும்.

பின்னர் அங்கிருந்து தலைசுமையாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு சார்த்தப்பட்டு மகாதீபாராதனை நடக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Emtxel
via Read tamil news blog

Post a Comment

0 Comments