ஒமைக்ரானால் பாதிகப்பட்ட 91சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தியுள்ளதாகவும், மூன்று பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏழு சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஒமைக்ரான் பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட 183 ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 87 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஏழு பேர் தடுப்பூசி செலுத்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், 70 சதவீத ஒமைக்ரான் பாதிப்புகள் அறிகுறியற்றவை என்றும், 30 சதவீத வழக்குகளில் அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
"இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 183 ஓமிக்ரான் பாதிப்புகளில், 87 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். டெல்லியில் இரண்டு பேரும், மும்பையில் ஒருவரும் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளனர். பெரும்பான்மையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களிடம் தான் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறது. அவர்களிடம் தொடர்புடைய சிலரிடம் தொற்று பரவியிருக்கிறது'' என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3prd8kT
via Read tamil news blog
0 Comments